சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் ஞானவேல். இவர் தனது மனைவி ஜெயசுதா மற்றும் உறவினர்களுடன் நேற்று பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நேற்று குளிக்க சென்றுள்ளனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சென்னை சிறுவர்கள் பலி - அம்பராம்பாளையம் ஆறு
பொள்ளாச்சி: அம்பராம்பாளையம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சென்னையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் ஞானவேல் உட்பட அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அதைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அருகிலிருந்த பொதுமக்களும் நிச்சல் அடித்து அந்த நான்கு சிறுவர்களையும் மீட்டனர். எனினும் கிரித்திஷ் கண்ணன் மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயக்க நிலையில் இருந்த மார்ட்டின் எட்வர்ட், ஹரிதாஸ் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை காவல்துறையினர் இறந்த சிறுவர்களின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து செய்து வருகின்றனர்.