தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு சங்கத்தில் ரூ.61.58 லட்சம் மோசடி - கோவையில் இருவர் கைது! - கோவை பண மோசடி

கோவையில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.61.58 லட்சம் மோசடி செய்த இருவரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 24, 2023, 11:48 AM IST

கோவை:ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் செயலாளராக வெள்ளலூரைச் சேர்ந்த மீனசென்னம்மாள்(44) என்பவர் பணியாற்றி வருகிறார். அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தரவடிவேலு(66) என்பவர் பணியாற்றி 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்று பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018ஆம் ஆண்டு மீண்டும் எழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு தணிக்கை நடந்தது. இந்த தணிக்கையின் மீனசென்னம்மாள், சுந்தரவடிவேலு ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2015 முதல் 2021ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பெற்ற கடன் தொகையை பெற்றுக்கொண்டு அதை சங்கத்தில் வரவு வைக்காமலும், சங்கத்தின் செலவுகளை பொய்யாக கணக்கு எழுதியும் 61 லட்சத்து 58 ஆயிரத்து 994 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து வீட்டு வசதி வாரிய சங்க துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின்பேரில், மீனசென்னம்மாள் மற்றும் சுந்தரவடிவேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் இன்று (பிப்.24) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கில் ரூ.1.60 லட்சம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details