தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2019, 3:51 PM IST

ETV Bharat / state

‘அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன’ - சீமான்

கோவை: அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பரிதாபமாக பலியாகியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman
seeman

மேட்டுப்பாளையம் நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளனர். உரிமையாளரின் வீட்டுக் கழிவுநீர் இங்கே சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமை சுவராகத்தான் பார்க்கிறேன்.

குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டித் தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே இது குறித்து புகார்களை தெரிவித்தும் அலுவலர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். அரசின் இழப்பீடு போதுமானதா? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா?

போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது" என்று கூறினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details