கோவை மாட்டத்திலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது மநில தடகள விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கம் விழா இன்று நடைபெற்றது.
இப்போட்டியின் துவக்கமாக 80 மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இதனை தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க அலுவலர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவையில் இன்று (பிப்.14) தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறும், இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1,200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர்.