கோவை மாவட்டம், சேரன் மாநகர் பகுதியில் எட்டு வயது சிறுமி ஆடு மேய்க்க காட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அச்சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.