கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், விதிகளை மீறி எவ்வித காரணமும் இல்லாமல், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் உலா வருவோரை காவல் துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்கின்றனா்.
அந்த வகையில் பொள்ளாச்சி நகர பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் இந்தப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் 16 பேரை பிடித்து, தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனா். மேலும், அவா்களுக்கு உடனடியாக பிணையும் வழங்கப்பட்டது.