தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி - கோவையில் 15 லட்ச ரூபாய் மோசடி

கோவை மாவட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி
இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

By

Published : Mar 12, 2022, 6:34 AM IST

கோவை:சூலூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரதீப், தன்யா ஆகிய இருவர் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டார்.

முருகன் (பாதிக்கப்பட்டவர்)

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 15 ஆண்டு கால நண்பரான பிரதீப், தனக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் தன்யா என்பவரை தெரியும். அவர் பணம் கொடுத்தால் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவார் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி எனக்கும், எனது தம்பிக்கும் வேலை வாங்கித் தர முதலில் ரூ.5 லட்சம் கொடுத்தேன். இதையடுத்து தவணை முறையில் மொத்தமாக ரூ.15 லட்சம் கொடுத்தேன். ஆனால், தன்யா வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:காந்தி, படேலின் மண் குஜராத்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details