தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் முழு ஊரடங்கை மீறி இறைச்சி கடைகள் திறப்பு... சீல் வைத்த அலுவலர்கள்! - Coimbatore chicken shop seized

கோவை: முழு ஊரடங்கு உத்தரவையும் மீறி திறக்கப்பட்ட 15 இறைச்சி கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

hop
ship

By

Published : Aug 30, 2020, 3:01 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆக.30) கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சோமனூர் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறந்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கருத்தம்பட்டி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

விதிகளை மீறி திறக்கப்பட்டிருத்த 15 இறைச்சிக் கடைகளுக்கும் வருவாய் அலுவலர் முத்துமாணிக்கம் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details