சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதேபோல், இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று (மார்ச் 24) மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
144 தடை உத்தரவை மீறு மக்கள்: அதிரடியில் இறங்கிய காவல் துறையினர்! இதையடுத்து, அத்தியாவசிய தேவையை தவிர்த்து பொது இடங்களுக்கு வரும் மக்களை விசாரித்து, காவல் துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதில் பல பகுதிகளில் பொது மக்களிடம் கெஞ்சியும், அதிரடியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையத்தில் 144 தடை உத்தரவை மீறி வருகின்ற மக்களை காவல்துறையினர் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க...இமாச்சலில் புதிதாக 912 பேர்...! - மாநில அரசு தகவல்