கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தானிகண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஈஷா யோக மையம் உள்ளது. இதன் பின்புறம் சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் சாலையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பாம்பு பிடிப்பதற்கு தேவையான கருவிகள் ஏதும் இல்லாததால் செய்வதறியாது நின்றுள்ளனர். அப்போது தீடீரென ஈஷா யோக மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் 15அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு சாக்குப்பையில் அடைக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.