கோவையில் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் மாநகர் முழுவதும் போதைப்பொருள் விற்பனை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காவலர்களுக்கு ஒண்டிப்புதூர் பகுதியில் வசிக்கும் சிங்கம் (40), பாண்டியம்மாள் (33) தம்பதியினர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.