கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த உருளிக்கல் குடியிருப்பு ஒன்றில் 12 அடி நீளமுடைய ராஜ நாகம் புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
குடியிருப்பில் புகுந்த 12 அடி நீளமுடைய ராஜ நாகம்
கோவை: வால்பாறை பகுதியில் குடியிருப்பில் புகுந்த 12 அடி நீளமுடைய ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
பிடிபட்ட ராஜ நாகம்
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் குடியிருப்பில் புகுந்த ராஜ நாகத்தை பிடித்தனர்.
அதன்பின், மானாம்பள்ளி ஆணைக்காயம் வனப்பகுதியில் ராஜ நாகத்தை வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
TAGGED:
covai district news