தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இன்று 112 பேருக்கு கரோனா பாதிப்பு!

கோவை: இன்று மட்டும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.

ovai
ivai

By

Published : Aug 5, 2020, 9:58 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 4 ஆயிரத்து 144 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details