தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து 105 பவுன் நகை அபேஸ்; வீடியோ வைரல்! - 105 sovereign of gold theft

கோவை: விபத்துக்குள்ளான நகைப்பட்டறை ஊழியருக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து, அவரிடமிருந்து 105 பவுன் தங்கநகையை பறித்துச் சென்ற நபர்களில் ஒருவரை சிசிடிவி வீடியோ உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜா

By

Published : Jun 4, 2019, 10:29 PM IST

கோவை சலீவன் வீதி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அதே பகுதியை சுரேஷ் என்பவரின் நகை பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 105 பவுன் தங்க நகையை விற்பனைக்காக ராமமூர்த்தி, கோவையில் இருந்து தாராபுரத்திற்கு எடுத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, ராமமூர்த்தியின் இருசக்கர வாகனம் மீது அடையாள தெரியாத நபர்கள் மோதினர்.

இதில் நிலைகுழைந்து கீழே விழுந்த ராமமூர்த்திக்கு உதவுவதுபோல் நடித்து, அவரின் பையில் இருந்து 105 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது குறித்து ராமமூர்த்தி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோக்களை சோதனையிட்டனர். அதில், ராமமூர்த்தி இருசக்கர வாகனம் மீது மோதுவதும், உதவுவதுபோல் நடித்து நகைப்பையை திருடிவிட்டு சென்றது பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சி

இதில், நகைப்பையை திருடி சென்றது தேனியைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொரு நபரையும் தேடிவருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details