தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஒரு குடோனில் சோதனை மேற்கொண்டபோது மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1000 கிலோ குட்கா பறிமுதல்... ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது - gutkha
கோவை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 1100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
kudkaa
இதனையடுத்து அங்கு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோதிலால் மற்றும் சீதாராம் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வட மாநிலத்திலிருந்து 1,100 கிலோ குட்கா கடத்தி வந்ததும் இதனை அந்த சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் இருவரிடமும் கருமத்தம்பட்டி காவல் துறையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.