கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு என்கிற மச்சுபையன். இவர் 2019ஆம் ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் செந்தில் பிரபுவை கைது செய்தனர்.