தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர் வீட்டில் 3 லட்சம் பணம், 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை! - latest coimbatore district news

கோவை மாவட்டம், சோமனூரில் பட்டப்பகலில் கிருஷ்ணசாமி என்ற முதியவரின் வீட்டின் கதவை உடைத்து 3 லட்சம் பணம் பத்து சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

10-sovereign-gold-and-3-lack-rupees-theft-from-old-man-house
முதியவர் வீட்டில் ரூ. 3 லட்சம், 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை

By

Published : Jul 28, 2021, 2:52 PM IST

கோவை மாவட்டம், சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் கிருஷ்ணசாமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

நேற்று (ஜூலை.27) காலை சொந்த வேலை காரணமாக கிருஷ்ணசாமி வெளியூர் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவர், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கருமத்தம்பட்டி காவலர்களும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், காவல் துறையினர் பகல் நேரத்திலும் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பாலியல் தொழில் பணத் தகராறில் வட மாநில இளைஞர் கொலை - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details