தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை - கோவை கணியூர் கேபிஆர் கல்லூரியில் யோகா

கோவை: இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 7 நிமிடத்தில் விளையாட்டு பயிற்சி, யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை
பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை

By

Published : Dec 5, 2019, 12:11 PM IST

யோகா, விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் பங்கெடுத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படும் 365 ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் பள்ளிகளில் இன்று 2019 ஆம் ஆண்டுக்கான உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி, யோகாசனம் செய்தனர். ஏழு நிமிடங்கள் நடந்த இந்த யோகா உலக சாதனையில் 1.42 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை

இந்தியாவில் இந்த சாதனையை இதுவரை 76 ஆயிரம் பேர் பங்கேற்று செய்துள்ளனர். தற்போது ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் அதை முறியடித்துள்ளது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த கோவை கணியூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த உலக சாதனைக்கான சான்றிதழ்களை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் நிர்வாகிகள் பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களின் யோகா கின்னஸ் சாதனை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details