தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்பு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்

கோவை : துபாயில் இருந்து வந்த மீட்பு விமானத்தில், நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold seized
gold seized

By

Published : Aug 27, 2020, 2:10 PM IST

துபாயில் இருந்து 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோவை வந்தடைந்தது. இவ்விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில், பயணிகள் அனைவரையும் அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அலுவலர்கள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

சோதனையில் எதுவும் கிடைக்காததால், இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைகளில் ஆறு பாக்கெட்டுகள் இருந்ததும், அதில் பேஸ்ட் ஃபார்ம் (Paste form) என்ற முறையில் தங்கத்தை பொடியாக்கி, கெமிக்கல்களுடன் கலந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இந்த பேஸ்ட் ஃபார்மில் கெமிக்கல்கள் இருந்ததால், விமான நிலையத்தில் இருந்த பரிசோதனைக் கருவிகளில் தங்கம் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அத்தம்பதியினரிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரத்து 163 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த மார்ச் மாதம் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில், கரோனா முடக்கத்தினால் கையில் இருந்த பணம் செலவழிந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குத் திரும்பி முடியாமல் அவர்கள் தவித்து வந்துள்ளனர்.

அப்போது ஒரு கும்பல் அவர்களுக்கு உதவி செய்ததோடு, தங்கம் கடத்தி வரச் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த அலுவலர்கள், இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் முதல் முறையாக பேஸ்ட் ஃபார்ம் வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டது, அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'கோயம்பேடு சந்தை திறப்பா?' பார்வையிட வரும் ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details