தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 17000 கடந்து இருந்த நிலையில் தற்போது ராயபுரத்திலும் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 15000 நெருங்கியுள்ளது.அதில் 93 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். 5 விழுக்காடு நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை சென்னையில் மொத்தமாக 1,55,639 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 1,42,875 நபர்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர் மீதமுள்ள 9706 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இறந்தவரின் விழுக்காடும் 1.96 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம் - 17566 பேர்
அண்ணா நகர் - 17400
பேர்ராயபுரம் - 14964 பேர்
தேனாம்பேட்டை - 14773 பேர்
தண்டையார்பேட்டை - 12803 பேர்
திரு.வி.க. நகர் - 11910 பேர்