புதுச்சேரி:டி ஸ்கொயர் விலாக் என்ற பெயரில் யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள உணவுக் கடைகளை தேடிச் சென்று புதுப்புது உணவுகள் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருபவர் தேவராஜ். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள முருகா இன் என்ற ஓட்டலுக்கு சென்ற போது தனது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டல் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
வாகனத்தை சாவியுடன் நிறுத்தி வைத்திருந்ததால் மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பெரிய கடை காவல் நிலையத்தில் யூடியூபர் புகார் அளித்து விட்டு சென்றுள்ளார். சில மாதங்கள் கழித்து திடீரென சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று தேவராஜிற்கு வந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தியை அடிப்படையாக வைத்து தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் யூடியூபர் தேவராஜன் ஈடுபட்டார். கையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு, திருடி சென்ற நபர் அடையாறு வழியாக இருசக்கர வாகனத்தை கொண்டு சென்று போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டதை அறிந்த தேவராஜ், அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் சென்று விசாரணை செய்துள்ளார்.
குறிப்பாக விவரங்களை போலீசாருக்கு தெரிவித்து, அபராதம் விதிக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஓட்டுனரின் லைசென்ஸ் எண் ஆகியவற்றை சென்னை அடையாறு போக்குவரத்து போலீசாரிடமிருந்து பெற்றுள்ளார். பின்னர் ஓட்டுநர் உரிமம் பூந்தமல்லியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பெறப்பட்ட காரணத்தினால், அங்கு சென்று ஓட்டுநர் உரிம நம்பரை பயன்படுத்தி திருடனின் முகவரி குறித்து விசாரணை செய்துள்ளார்.
தனது நண்பர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்க்கிற காரணத்தினால் ஓட்டுநர் உரிமை நம்பரை வைத்து திருடிய நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.