சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் தேவி (33). இவர் கடந்த 8ஆம் தேதியன்று அவர் வசிக்கும் தெரு வழியாக நடந்துசென்றார். அப்போது அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், தேவியிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் இருந்த கைப்பையை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக தேவி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (25), சங்கர் குமார் (25) ஆகிய இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.