சென்னை தண்டையார் பேட்டை கருணாநிதி நகர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருபவர் காமராஜ். இவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்டு உள்ளனர். இதுகுறித்து காமராஜ் காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அங்கு வந்த ஆர்கே நகர் காவல் துறையினர், இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், எழில் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், முகமது யூசப் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது, முன்னரே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது.
வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது!
சென்னை: தண்டையார்பேட்டையில் பெட்டிக் கடை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இளைஞர்கள் கைது
மேலும் இவர்கள் போதையில் கத்தியைக் காட்டி மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் ஆர்.கே., நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பயன்படுத்திய கத்தி, இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரில் தப்பி ஓடிய புவனேஷ் என்ற இளைஞனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.