தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிலம்பாக்கத்தில் இளைஞர் வெட்டப்பட்டதால் பதற்றம் - youth was attcaked by a gang in Kovilambakkam

கோவிலம்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலம்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக்கொலை
கோவிலம்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக்கொலை

By

Published : Mar 15, 2022, 10:38 AM IST

சென்னை, நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு(21), இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர், மூன்றாவது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். 14ம் தேதி நள்ளிரவு, பணியில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து, விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகரணை போலீசார், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷ்ணுவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளைஞர் மீது தாக்குதல்

சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கரணை சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : ‘கள்ளன்’ படம் வெளியிடுவதில் சிக்கல் - இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details