தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொலை - chennai Youth murder

சென்னை: மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொலை
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொலை

By

Published : Apr 23, 2020, 12:55 PM IST

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (17). இவர் மெக்கானிக்காகப் பணிபுரிந்துவருகின்றார். கடந்த 21ஆம் தேதி இரவு வசந்த் அவரது தெருவில் நின்றுகொண்டு செல்போன் பேசியிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வசந்தை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தை அருகிலிருந்த நபர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது வசந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று சரத் தனது நண்பர்களுடன் வந்து வசந்தை வெட்டிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனால் தலைமறைவாக உள்ள சரத் உள்பட மூன்றஉ பேரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். தற்போது வசந்தை வெட்டியது தொடர்பான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டிஎஸ்பி போல் நடித்து சிகரெட் பாக்கெட்டுகளை அபேஸ் செய்த திருடன்!

ABOUT THE AUTHOR

...view details