சென்னை:தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன் தினம் (அக்-7)இறந்த நிலையில் அவரது இறுதி ஊர்வல நிகழ்வு நேற்று (அக்-8) மாலை நடைபெற்றது. அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் பலர் குடிபோதையில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.
அப்போது அதிலிருந்த இளைஞர்கள் பலர் அவ்வழியாக வந்த மாநகரப்பேருந்தை வழிமறித்து, சாலையின் நடுவில் பட்டாசுகள் வெடித்தது மட்டுமல்லாமல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அப்பகுதியில் இருந்த கடைகளின் ஷட்டர்களை இழுத்து மூடி தகராறிலும் ஈடுபட்டனர்.