தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் கொலை - கொலையாளிகள் 4 பேரை ஒரு மணிநேரத்தில் கைது செய்த போலீஸ்! - சென்னை செய்திகள்

சென்னை அருகே நீலாங்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகள் 4 பேரை போலீசார் ஒரு மணிநேரத்தில் கைது செய்து பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் கழுத்தறுத்து கொலை-கொலையாளிகள் 1 மணி நேரத்தில் 4 பேர் கைது!
இளைஞர் கழுத்தறுத்து கொலை-கொலையாளிகள் 1 மணி நேரத்தில் 4 பேர் கைது!

By

Published : Feb 3, 2023, 7:16 PM IST

Updated : Feb 3, 2023, 7:35 PM IST

சென்னைஅருகே கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் அண்ணா சாலையில் ராகவன் என்ற இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து சென்ற நீலாங்கரை போலீசார் ராகவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், போலீசார் ஒரு மணி நேரத்தில் கொலை தொடர்பாக பாலாஜி, அஜய், நஜீமுதீன், விவேக் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகவும் அப்போது, ராகவன், பாலாஜி என்பவரை அடித்துள்ளார். இதனால் கோபடைந்த பாலாஜி மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து சிறிது நேரத்தில் ராகவன் சம்பவ இடத்திற்கு வந்த போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் கைது

Last Updated : Feb 3, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details