சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் செல்போன் மெக்கானிக் பிரகாஷ் (27). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் இன்று இரவு இவர் கொருக்குப்பேட்டையிலிருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை! - காவல்துறை விசாரணை
சென்னை: லாரியை முந்திசெல்ல முற்பட்ட இளைஞர், லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அந்த வழியாக பருப்பு ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியத்தில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.