சென்னை, ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் டேனியல் பொறியியல் பட்டதாரி. இவர் நேற்று மாமல்லபுரம் சென்று விடுமுறையைக் கொண்டாடியுள்ளார். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினர். மதுபோதையில் இருந்த டேனியல், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கை வீட்டில்விட இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை கண்மூடித்தனமாகச் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், பேசின் பாலத்தைக் கடக்கும்போது, தடம்புரண்ட வாகனம் பேரிகார்டில் மோதி தூக்கி வீசப்பட்டது. 100 அடி உயரம் பாலத்திலிருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே, லிவிங்ஸ்டன் டேனியல் தலைசிதறி இறந்தார். இந்த விபத்தில், கார்த்திக் படுகாயம் அடைந்தார்.