தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் விசாரணை முடித்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு - போலீஸ் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு - chennai police

சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

the man died after he completing the theft case investigation Relatives have accused the mgr nagar police in Chennai
the man died after he completing the theft case investigation Relatives have accused the mgr nagar police in Chennai

By

Published : Jul 14, 2023, 8:12 AM IST

சென்னை: எம்.ஜி.ஆர் நகர் பம்மல் நல்ல தம்பி தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பி கேட்டகரி ரவுடியான ஸ்ரீதர் மீது ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வீட்டில் 1 சவரன் நகை காணாமல் போனதாக உரிமையாளர் கொடுத்த புகார் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் ஸ்ரீதரை கடந்த ஜூலை 12ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து அவரிடம் கைரேகை பதிவுகளை போலீசார் பெற்றுள்ளனர். பின்னர் ஜூலை 13ஆம் தேதியும் ஸ்ரீதரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்து மதியம் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டுக்குச் சென்ற ஸ்ரீதருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரது உறவினர்கள் ஸ்ரீதரை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஸ்ரீதர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர் உயிரிழந்த ஸ்ரீதரின் உடலைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், போலீசாரின் சித்ரவதையால் ஸ்ரீதரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில், உடற்கூராய்விற்கு பிறகே உயிர் இழப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ஜூலை 12ஆம் தேதி ஸ்ரீதர் என்பவரை கன்னக்களவு வழக்கில் சிசிடிவி பதிவின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணைக்காக அழைத்து கைரேகை எடுத்து முடித்து, பின்பு மீண்டும் ஜூலை 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டார்.

மீண்டும் ஜூலை 13ஆம் தேதி, ஸ்ரீதர் அவர் மனைவியுடன் காவல் நிலையத்திற்கு சுமார் 12.30 மணிக்கு ஆஜரானவரை விசாரித்து விட்டு, பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் ஆய்வாளர் ஸ்ரீதரை அவருடைய மனைவியுடன் அனுப்பி விட்டார். போகும் வழியில் ஸ்ரீதர் தன் மனைவியிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்த மருத்துவர் வாயு கோளாராக இருக்கலாம் என கருதி சிகிச்சை அளித்து அனுப்பியுள்ளார்.

பிறகு வீட்டிற்கு சென்றவுடன் மாலை சுமார் 3 மணியளவில் ஸ்ரீதருக்கு வலிப்பு போன்று ஏற்பட்டு நாக்கை கடித்து கொள்ளவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருக்கு உப்பு நீரை ஊற்றியுள்ளதாகத் தெரிகிறது. பின்னர், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்த நிலையில், சுமார் மாலை 3.20 மணியளவில், ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஸ்ரீதரின் உடல் உடற்கூறாய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, ஸ்ரீதரின் மனைவி மஞ்சு என்பவரிடமிருந்து புகார் மனு பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரில், மஞ்சு தனது கணவருக்கு சுமார் 2 மாதத்திற்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரை வீரன் புத்தக வழக்கு: மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details