சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், நீலேஷ் குமார் (31). இவர் சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து, தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்துள்ளார்.
இதனால் சிகிச்சைக்காக ஜனவரி 23ஆம் தேதி அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீலேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,நேற்று (ஜன 26) மாலை திடீரென மருத்துவமனை வாளகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.