சென்னை: மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் உள்ள வீட்டில் தங்கி தர்மபுரியை சேர்ந்த மாணவர் சரண் (22), சி.ஏ படித்து வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற சரண் நேற்று சென்னைக்கு திரும்பிய நிலையில், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராயபேட்டை மருத்துவமனைக்கு வைத்தனர்.