சென்னை திருவல்லிக்கேணி கனால் தெருவில் வசித்து வருபவர் அறிவழகன் (25). இவர் மீது திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், இவரின் எதிர்தரப்பை சேர்ந்த பல்பு என்கிற குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர், இவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த இவர், நேற்று இரவு வீட்டில் இருக்கும்போது சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து, இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின் அந்த கும்பல் அவரின் தலையை சிதைத்து, மூளையை வெளியில் எடுத்து அவரது வீட்டு தட்டில் வைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.