சென்னை தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28) கூலித் தொழில் செய்துவந்தார். இந்நிலையில் நேற்று(மே.30) இரவு விக்னேஷ், தனது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதனை நேரில் கண்ட பொதுமக்கள் சிலர் பீர்க்கன்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.