தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி: பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்... - சொமாட்டோ ஊழியரை தாக்கி உணவு

சென்னையில் சொமாட்டோ ஊழியரை வழிமறித்து கத்தியால் தாக்கி பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்
பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்

By

Published : Nov 4, 2022, 8:51 AM IST

சென்னை: சைதாப்பேட்டையை சேர்ந்த சரவண குமார் (20) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், பகுதி நேரமாக சொமாட்டோவில் டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த மாதம் 25ஆம் தேதி சரவணகுமார் தியாகராய நகரில் இருந்து முல்லை நகருக்கு இருசக்கர வாகனத்தில் ஆர்டர் பெற்ற, பீட்சா மற்றும் பர்கரை டெலிவரி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

வியாசர்பாடியில் பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு எடுக்கும் போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சரவண குமாரின் உணவு கொண்டு செல்லும் பையிலிருந்து திருட முயற்சி செய்துள்ளார்.

பின்னர், அவர் விழித்துகொள்ளவே மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் சரவண குமாரை சரமாரியாக வெட்டி அவர் வைத்திருந்த பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 1000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்

இச்சம்பவம் தொடர்பாக சரவண குமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த கரண் (எ) கரடி கரண் என்பவனை கைது செய்தனர்.

விசாரணையில் கரண் (எ) கரடி கரண் வியாசர்பாடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் போது வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:'கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் இல்லை' என அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் ஃபைன்!

ABOUT THE AUTHOR

...view details