சென்னை:மடிப்பாக்கம் ராம்நகர் வடக்கு ராம்குமார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி(45). இவர் மருந்து நிறுவனம் ஒன்றில் தேசிய விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த (ஜூலை 1) ஆம் தேதி கந்தசாமி பணி நிமித்தமாக மும்பை சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ள விருதுநகர் சென்றுள்ளனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கந்தசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். காலை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இத்தகவலின் பேரில் உரிமையாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்தனர். வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்து விட்டு 40 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக தனது புகாரில் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.