தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்ட்ராகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது - இன்ஸ்ட்ராகிராமில் மோசடி

சிறுமியிடம் இன்ஸ்ட்ராகிராமில் பழகி பாலியல் வன்கொடுமை செய்தவரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

By

Published : Dec 22, 2021, 12:11 PM IST

சென்னை: திருவல்லிக்கேணியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக கோகுல் (20) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கோலை காவல் நிலையம் அழைத்து வந்து கோகுலை விசாரணை செய்தனர்.

விசாரணையில், கோகுல் சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கோகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details