சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (27). இவர் சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியில் குடியிருந்துள்ளார். அப்போது தனது வீட்டின் அருகே இருந்த 17 வயது சிறுமியிடம் அன்வர் பாட்ஷா பழகியுள்ளார்.
பின்னர் இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அன்வர் பாட்ஷா சேலையூர் பகுதிக்கு குடிவந்தார். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் அச்சிறுமி தனது தாயாருடன் தாம்பரத்தில் இருக்கும் பி.எஃப் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கிருந்து சிறுமி மாயாமானர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி அன்வர் பாஷாவுடன் சென்றது தெரியவந்தது.