தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசைவார்த்தைக் கூறி சிறுமி கடத்தல்: போக்சோவில் இளைஞர் கைது! - chennai youth arrested pocso

சென்னை: ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் இளைஞர் கைது
போக்சோவில் இளைஞர் கைது

By

Published : Aug 14, 2020, 2:59 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் - உஷா தம்பதி. இவர்கள் வேளச்சேரி மெயின் ரோடு அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்களின் தள்ளுவண்டி கடைக்கு அருகே உள்ள மற்றொரு உணவகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த நிவேந்திரன்(23) என்ற இளைஞர் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே செல்வகுமாரின் கடைக்கு அவரது 16 வயது மகள் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியுடன் நிவேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி நிவேந்திரன் தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியவர தாம்பரம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் நிவேந்திரனின் தொலைபேசி சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சிறுமியை பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியை கடத்திச் சென்ற நிவேந்திரன் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details