சென்னை: என்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்(26), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையில் கத்தியைச் சுழற்றிய காணொலி ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஞ்சித்திற்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிறந்தநாள் வந்ததால், அவரது நண்பர் ஒருவர் அந்த காணொலியைப் பதிவிறக்கம் செய்து பின்னணியில் கேஜிஎப் திரைப்படத்தின் வசனத்துடன், ரஞ்சித் கத்தி சுற்றுவதுபோல் வீடியோவை சமுக வலைதளங்களில் வெளியிட்டார் .