சென்னை மதுரவாயலை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டரில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த மசாஜ் சென்டருக்கு கடந்த 5ஆம் தேதி வந்த இளைஞர் ஒருவர் 1,000 ரூபாய் கொடுத்து மசாஜ் செய்ய கூறியுள்ளார். அந்த இளம்பெண்ணும் மசாஜ் செய்து முடித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் மீண்டும் "ஹேப்பி எண்டிங்" செய்ய அந்த பெண் ஊழியரை வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் ஊழியரை கீழே தள்ளிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்டு கால் சவரன் நகையை பறித்துவிட்டு அந்த நபர் தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மசாஜ் சென்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் முக அடையாளங்களை வைத்து பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட அனகாப்புத்தூரை சேர்ந்த அஜித் என்கிற சுரேஷ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.