தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த இளைஞர் கைது - தங்கத்தை கடத்தி வந்த இளைஞர் கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ 250 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

By

Published : Jun 10, 2021, 6:34 PM IST

சென்னை, பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் ஒன்ரூ வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா ஆணையர் ராஜன் சவுத்ரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அலுவலர்கள் விமானப் பயணிகளை கண்காணித்தனர்.

இந்த சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க இலகா அலுவலர்கள் சோதனை இட்டனர். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த சாமி ஜேசையா (28) என்ற இளைஞரை விசாரித்தனர். தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதையடுத்து, அவரது உடமைகளை அலுவலர்கள் சோதித்தனர். அதில் ஒன்றும் இல்லாதையடுத்து சாமி ஜேசையாவை தனியறைக்கு அழைத்துச் சென்று அவரது உடைகளை சோதித்தனர்.

அப்போது சாமி ஜேசையாவின் ஜீன்ஸ் பேண்ட்டில் பெல்ட் போடும் பகுதியில் ரகசிய பாக்கெட் வைத்து அதில் ஒரு கிலோ 250 கிராம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்திருப்பதை கண்டுப்பிடித்தனர்.

அவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர். கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவர்கள் சாமி ஜேசையாவை கைது செய்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details