சென்னை: மேற்கு அண்ணா நகரை சேர்ந்த ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "என் மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேரு நகரில் நடந்து செல்லும்போது இளைஞர் ஒருவர், என் மகளிடம் முகவரி கேட்பது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல் இரண்டு முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் காவலர்கள் அவரை தேடி வந்தனர்.
இதனிடையே அந்நபர் மீண்டும் நேற்றிரவு (டிசம்பர் 27) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பட்டுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பி.பி.ஏ பட்டதாரி சரவணன்(30) என்பதும், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் சரவணன் மீது காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணின் ஆபாசப் படங்களைக் காட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் கைது