சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காமராஜர் நகர் வா.உ.சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34 ). இவர் தாம்பரம் இரும்புலியூரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (32) என்பவர் மணிகண்டனுடைய காய்கறி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்காததால், கடந்த 12 ஆம் தேதி காலையில் விநாயகமூர்த்தி மணிகண்டன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, மணிகண்டன் உள்ளே சென்றவுடன் வீட்டில் வைத்து இருந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை விநாயகமூர்த்தி லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.