சென்னை:ஆந்திர மாநிலம் கஜல மண்டியம் காவல் துறையினர் ஆந்திராவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் என்பது தெரிந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திராவில் விற்று வருவது தெரியவந்தது. இந்த திருட்டுக்கு கூட்டாளியாக இருந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரையும் ஆந்திரா கஜல மண்டியம் காவல் துறையினர் பிடித்தனர்.