தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலி இறந்த சோகத்தில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த காதலன் - மதுரையை சேர்ந்த வாலிபர் தற்கொலை

சென்னையில் காதலி இறந்த சோகத்தைத் தாங்க முடியாத இளைஞர் ஒருவர் வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த காதலன்..!
காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த காதலன்..!

By

Published : Feb 1, 2022, 8:39 AM IST

சென்னை:கல்லுப்பட்டி, ஆவடையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு கார்த்தி(21). இவர் சென்னையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பெரியமேடு கடப்பா ரங்கையா தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை தீர்வு அல்ல

உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் தற்கொலை செய்துகொள்ளப்போதவாதாகவாட்ஸ் ஆப்பில்ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதனடிப்படையில், அவரது நண்பர்கள் லட்சுமணன், அஜித் குமார் ஆகியோர் காவல்துறைக்கு தகவல்கொடுத்தனர். இதையடுத்து காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலி இறந்த சோகத்தால் மரணம்

காவல்துறையினரின் முதல்கட்ட தகவலில், பிரபு காதலித்துவந்தப் பெண் ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன்காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற நிலையில் நேற்று உயிரிழந்தார் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details