சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் திடீரென்று தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் உடனே தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, அவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஹரிநாத் எனவும், கடந்த 11ஆம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக தந்தை ஜெய்சிங், சகோதரி சங்கீதா ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாகவும் தெரிவித்தார்.