சென்னை: வியாசர்பாடி, எஸ்.ஏ காலனியைச் சேர்ந்தவர் சீதாபதி. இவரது 21 வயது மகன் மகாவிஷ்ணு. தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், மகாவிஷ்ணு தனது நண்பர் ராம்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள தனியார் பாரில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய மகாவிஷ்ணு, பின்னர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று உறங்கினார்.
மகாவிஷ்ணு நேற்று இரவு அமைதியாக தூங்கி கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இன்று அதிகாலை அவரை எழுப்ப முயன்ற போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. உடனே மகாவிஷ்ணுவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மகாவிஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்ததனர். தகவல் அறிந்து வந்த எம்.கே.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாவிஷ்ணுவின் இறப்புக்கான காரணம் குறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மகாவிஷ்ணு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது