சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது-23). இவர் அதேபகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமார் ஜந்து வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதோ சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் 35-வயது மதிக்கதக்க பெண்ணிடம் யுவராஜ் இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. தொடர்ந்து, பின்னாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஆறுமாதமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வேறு ஒரு நபருடன் அந்த பெண் நட்பாக பேசி வந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யுவராஜ், அந்தப் பெண்ணின் செல் போனில் இருந்த அந்த நபரின் எண்ணை எடுத்து, யுவராஜின் நண்பர் செல்போன் மூலமாக அந்த நபரிடம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது யுவராஜ் அந்த நபரை மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.
பின்னர், அந்த நபர் ரவுடி ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு யுவராஜியின் நண்பனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, "நான் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரிய ரவுடி. என்மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது" என அவர் செய்த கொலைகள் குறித்து பட்டியலிட்டு பதிலுக்கு மிரட்டியுள்ளார்.
இதையெல்லாம் கேட்ட யுவராஜ் மற்றும் யுவராஜின் நண்பரையும் மிரட்டியதோடு மட்டுமில்லாமல் நேரில் சந்தித்து சண்டையிடுவதற்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலையில், யுவராஜ் கடைக்கு போன் செய்து நான் இன்று வேலைக்கு வரவில்லை எனக் கூறி போனை வைத்துள்ளார். சந்தேகமைடந்து யுவராஜ்ஜின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்தாழிட்டு இருந்தது.
பலமுறை கதவைத் தட்டியும் யுவராஜ் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது யுவராஜ் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைக் கண்ட யுவராஜ்ஜின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தான் பெரிய ரவுடி எனக் கூறி யுவராஜ்ஜை மிரட்டும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் கொடிக்கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை.. தடுக்க நடவடிக்கை எடுக்குமா அரசு?