சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அப்பெண் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அப்பெண் வெளியிட்டுள்ள பதிவில், "அந்த இடத்தில் தான் மட்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகவில்லை. பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அந்த அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகிறேன்" என்றார்.